/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மரப்பலகைகள் திருட்டு 2 பேருக்கு 'காப்பு'
/
மரப்பலகைகள் திருட்டு 2 பேருக்கு 'காப்பு'
ADDED : நவ 21, 2025 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், கிச்சிப்பாளையம், நடராஜர் பஜனை மட தெருவை சேர்ந்தவர் சீனிவாசன், 48. நாராயணா நகர், செவ்வாய்ப்பேட்டை ஆகிய இடங்களில், 'பிளைவுட்' குடோன் வைத்து வியாபாரம் செய்கிறார். கடந்த, 12 மாலை, நாராயணா நகரில் உள்ள குடோனில், 28 மரப்பலகைகளை, மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
அதன் மதிப்பு, 40,000 ரூபாய். இதுகுறித்து சீனிவாசன் புகார்படி, கிச்சிப்பாளையம் போலீசார் விசாரித்ததில், சேலம், உடையாப்பட்டி அருகே அதிகாரப்பட்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 40, அல்லிக்குட்டை, முருகன் நகர் வெங்கடாசலம் காலனியை சேர்ந்த மூர்த்தி, 45, ஆகியோர் திருடியது தெரிந்தது. இருவரையும் நேற்று, போலீசார் கைது செய்தனர்.

