ADDED : மார் 15, 2024 03:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: ஆத்துார், கெங்கவல்லி பகுதிகளில் முறைகேடாக மது விற்பதாக புகார் எழுந்தது. இதனால் நேற்று இரவு, 10:40 மணிக்கு, ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையில் தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கெங்கவல்லி டாஸ்மாக் கடை அருகே உள்ள பாரில், மதுபாட்டில் விற்ற, சங்ககிரி, சத்யா நகரை சேர்ந்த அருண்குமார், 28, என்பவரை கைது செய்தனர். அவரிடம், 192 பீர், பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் தெடாவூரில் உள்ள டாஸ்மாக் கடை அருகே மதுபாட்டில் விற்ற, தெடாவூர், அம்பேத்கர் நகரை சேர்ந்த பிச்சாப்பிள்ளை, 60, என்பவரை கைது செய்தனர். அவரிடம், 151 பீர், பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

