ADDED : நவ 18, 2026 06:00 AM
அ நிறம் | அளவு
சேலம்:சேலம்
சிவதாபுரம் பகுதியில், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று
ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த
வேனை சோதனை செய்தனர். அதில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.
இது
குறித்து விசாரணை நடத்தியதில் கொண்டலாம்பட்டி, பெரியபுத்துாரை
சேர்ந்த சவுந்தர்ராஜன், 30, சிவதாபுரத்தை சேர்ந்த சின்னராஜா,
37, ஆகியோர் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள்
அப்பகுதியில் உள்ள மக்களிடம், குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி
கோழிப்பண்ணைக்கு அனுப்புவது தெரியவந்தது. வேனில் இருந்த, 1,050
கிலோ ரேஷன் அரிசி, வேனை பறிமுதல் செய்தனர்.
