தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் தொடங்கிய பக்தர்கள்

சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் தொடங்கிய பக்தர்கள்

சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் தொடங்கிய பக்தர்கள்


ADDED : நவ 18, 2026 05:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 18, 2026 05:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்;கார்த்திகை மாதம் ஐயப்பனுக்கு உகந்த மாதம். அந்த மாதத்தில் தமிழகத்தின் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வர். அதன்படி நேற்று கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

சேலம் குரங்குச்சாவடி பகுதியில் உள்ள சாஸ்தா நகர் ஐயப்பன் கோவிலில், கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு அதிகாலை முதலே ஐயப்பனுக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம், நெய், உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிேஷகம் நடந்தது. வேத மந்திரங்கள் முழங்க தீபாராதனை காட்டப்பட்டது.

சபரிமலை செல்வதற்காக மாலை அணிந்து, விரதம் இருக்க ஏராளமான பக்தர்கள், நேற்று அதிகாலை முதலே திரண்டு வந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்த, 1,500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பயபக்தியுடன் ஐயப்பனை வழிபட்டு, குருசாமியிடம் மாலை அணிந்து கொண்டு விரதத்தை தொடங்கினர்.

கார்த்திகை மாத முதல் நாளை முன்னிட்டு, ஏராளமானோர் ஐயப்பா ஆஸ்ரமத்தில் சுவாமிதரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள், இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலை யாத்திரை தொடங்கினர். இதற்காக கோவில் வளாகத்தில், பக்தர்களுக்கு இருமுடி கட்டி வழியனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து டிச., 27 வரை மண்டல பூஜை நடைபெறுகிறது. பின்னர் ஜன., 1ல் இருந்து மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. பக்தர்கள் அனைவரும் மண்டல, மகரவிளக்கு பூஜை நாளில் ஐயப்பனை தரிசனம் செய்து ஆசி பெற வேண்டும் என, கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us