/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கால பைரவருக்கு சிறப்பு பூஜை நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்
/
கால பைரவருக்கு சிறப்பு பூஜை நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்
கால பைரவருக்கு சிறப்பு பூஜை நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்
கால பைரவருக்கு சிறப்பு பூஜை நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்
ADDED : பிப் 04, 2024 10:01 AM
தலைவாசல்,: கால பைரவருக்கு நடந்த சிறப்பு பூஜையின்போது கூட்ட நெரிசலால், 20க்கும் மேற்பட்ட பெண்கள், மூச்சுத்திணறலுக்கு ஆளாகியும், மயக்கமும் அடைந்தனர்.
தேய்பிறை அஷ்டமியொட்டி தலைவாசல் அருகே ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவிலில் உள்ள கால பைரவருக்கு நேற்று முன்தினம் சிறப்பு அபி ேஷகம், பூஜைகள் செய்யப்பட்டன.
நள்ளிரவு, 12:00 மணிக்கு தீபாராதனையை பார்க்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். முன்னதாக, 11:00 மணிக்கு வழிபட நின்றிருந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கிய மூதாட்டி, பெண்கள் உள்பட, 30க்கும் மேற்பட்டோர் தடுமாறி விழுந்தனர்.
இதில் மூதாட்டி, பெண்கள் உள்பட, 20க்கும் மேற்பட்டோருக்கு மூச்சுத்திணறல், மயக்கம் ஏற்பட்டது. அவர்களை சக பக்தர்கள் மீட்டுச்சென்று, தண்ணீர் கொடுத்து அமரவைத்தனர். நெரிசலில் பக்தர்கள் மயங்கியதால் பதற்றம் உருவானது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், பக்தர்களை ஒழுங்குபடுத்தி வரிசையில் அனுப்பினர்.
போதிய போலீஸ் இல்லை
மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமியில் இக்கோவிலுக்கு ஏராளமானோர் வருகின்றனர். அவர்களை ஒழுங்குபடுத்த, போதிய போலீசார் இல்லை. முதலுதவி சிகிச்சை மையம் போன்ற வசதிகளும் செய்து தருவதில்லை என, புகார் எழுந்துள்ளது. இனி நெரிசலை தவிர்க்க கூடுதல் போலீசார், முதலுதவி சிகிச்சை மையம், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்துதர, பக்தர்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து தலைவாசல் போலீசார் கூறுகையில், 'அதிகளவில் கூட்டம் வந்ததால் நெரிசல் ஏற்பட்டது. அடுத்த மாதம் முதல், கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட, எஸ்.பி.,யிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.