/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பதவி உயர்வு கேட்டு சாலை மறியல் அங்கன்வாடி ஊழியர் 200 பேர் கைது
/
பதவி உயர்வு கேட்டு சாலை மறியல் அங்கன்வாடி ஊழியர் 200 பேர் கைது
பதவி உயர்வு கேட்டு சாலை மறியல் அங்கன்வாடி ஊழியர் 200 பேர் கைது
பதவி உயர்வு கேட்டு சாலை மறியல் அங்கன்வாடி ஊழியர் 200 பேர் கைது
ADDED : டிச 10, 2025 09:52 AM

சேலம்: தமிழ்நாடு அரசு அங்கன்வாடி சங்க கூட்டமைப்பு சார்பில், சேலம், கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பிரேமா தலைமை வகித்தார்.அதில், 1993ல் பணியில் சேர்ந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல்; தி.மு.க., தேர்தல் வாக்குறு-திப்படி அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்-களாக மாற்றி காலமுறை ஊதியம் வழங்குதல்; அங்கன்வாடி ஊழியர்களுக்கு, '5ஜி' மொபைல் போன் வழங்குதல் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட, 200க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்களை, போலீசார் கைது செய்து, வேனில் ஏற்றி அருகே உள்ள தனியார் மண்டபத்துக்கு அழைத்துச்சென்றனர். பின் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.