/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பள்ளியில் கலைத்திருவிழா போட்டி 200 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
/
பள்ளியில் கலைத்திருவிழா போட்டி 200 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
பள்ளியில் கலைத்திருவிழா போட்டி 200 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
பள்ளியில் கலைத்திருவிழா போட்டி 200 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
ADDED : அக் 29, 2024 01:20 AM
பள்ளியில் கலைத்திருவிழா போட்டி
200 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
வீரபாண்டி, அக். 29-
வீரபாண்டி, அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று பள்ளிக்கல்வித்துறை சார்பில், வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டது.
கட்டுரை, கவிதை, ஓவியம், நடனம், நாடகம், களிமண் பொம்மைகள், மணல் சிற்பம் என மாணவர்களின் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் போட்டி நடத்தப்பட்டது. 6 முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து பிரிவுகளிலும், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இன்றும் போட்டிகள் நடக்கவுள்ளது. குழு மற்றும் தனிநபர் பிரிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் மாணவர்கள், மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர்.