UPDATED : நவ 16, 2026 03:50 AM
ADDED : நவ 16, 2026 03:20 AM

அ நிறம் | அளவு
சேலம்: சேலம், உடையாப்பட்டி அருகே குமரகிரி பைபாஸ் சாலையில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில், தனியார் நடன பள்ளி சார்பில், 2,000க்கும் மேற்பட்ட மாணவர்களின், உலக சாதனை நடன நிகழ்ச்சி நேற்று நடந்தது.
பரத நாட்டியம், கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், கோலாட்டம், சிலம்பாட்டம், கும்மி ஆகிய வகை நடனங்களை, மாணவர்கள் குழுவாக பாடலுக்கு ஏற்றபடி ஆடினர். அவர்களை, சிறப்பு அழைப்பாளர்களான, 'டான்ஸ் மாஸ்டர்கள்' கலா, ஸ்ரீதர் பாராட்டினர். இந்த நடன நிகழ்ச்சியை, 'நோபல்' உலக சாதனை அமைப்பு பாராட்டி சான்-றிதழ் வழங்கியது.
