/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நகராட்சியில் சுங்க வசூல் ரூ.2.15 லட்சத்துக்கு ஏலம்
/
நகராட்சியில் சுங்க வசூல் ரூ.2.15 லட்சத்துக்கு ஏலம்
நகராட்சியில் சுங்க வசூல் ரூ.2.15 லட்சத்துக்கு ஏலம்
நகராட்சியில் சுங்க வசூல் ரூ.2.15 லட்சத்துக்கு ஏலம்
ADDED : பிப் 10, 2024 07:45 AM
தாரமங்கலம் : தாரமங்கலத்தில், நகராட்சி பஸ் ஸ்டாண்டு சுங்க வசூல், சைக்கிள் ஸ்டாண்ட், ஒலி பெருக்கி மற்றும் பூங்கா, புளியமரம், வாரச்சந்தை ஏலம் நேற்று நடந்தது.
கமிஷனர் ேஷம் கிங்ஸ்டன் தலைமையில் ஏலம் நடந்தது. தலைவர் குணசேகரன், துணைத் தலைவர் தனம் முன்னிலை வகித்தனர். இதில் பஸ் சுங்க வசூல், 40 ஆயிரத்து, 300 ரூபாய், சைக்கிள் ஸ்டாண்ட், 87 ஆயிரம், ஒலி பெருக்கி, 16 ஆயிரத்து, 150 ரூபாய்க்கு ஏலதாரரர்கள் ஏலம் எடுத்தனர். தொடர்ந்து பூங்கா, 60 ஆயிரத்து, 400 ரூபாய், புளியமரம், 11 ஆயிரத்து, 500 ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது.
தற்போது, அண்ணாசிலை அருகில் வாரச்சந்தை இயங்கி வருகிறது. அங்கு கட்டடம், மேற்கூரை, அமைக்க உள்ளதால், தற்காலிகமாக வேளாண்மை அலுவலகம் பின்புறம் இயங்க உள்ளதாக கூறி, சுங்க வசூல் ஏலத்தை துவக்கினர். யாரும் ஏலம் கேட்காததால், ஏலம் தள்ளி வைப்பதாக கமிஷனர் தெரிவித்தார்.