/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாநில அளவிலான சிலம்பம் தேசிய போட்டிக்கு 25 பேர் தேர்வு
/
மாநில அளவிலான சிலம்பம் தேசிய போட்டிக்கு 25 பேர் தேர்வு
மாநில அளவிலான சிலம்பம் தேசிய போட்டிக்கு 25 பேர் தேர்வு
மாநில அளவிலான சிலம்பம் தேசிய போட்டிக்கு 25 பேர் தேர்வு
ADDED : அக் 17, 2024 02:54 AM
ஆத்துார்: சேலத்தில் நடந்த மாநில அளவிலான சிலம்பம் போட்டியில், 25 பேர் தேசிய போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
அயோத்தியாப்பட்டணத்தில், கிரிடா பாரதி மற்றும் ஆத்துார் வசிஷ்டா சிலம்பம் அகாடமி சார்பில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி, நேற்று முன்தினம் நடந்தது. இதில், சேலம், கோவை, பெரம்பலுார், கள்ளக்குறிச்சி, மதுரை, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, 500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
சேலம் மாவட்ட அணி வீரர்கள் வெற்றி பெற்று ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனர். இரண்டாவது பரிசை பெரம்பலுார் அணியும், மூன்றாவது பரிசை கோவை அணியும் பெற்றன. மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற, 25 வீரர்கள் தேசிய போட்டிக்கு தேர்வாகினர். தேசிய போட்டி டிச., 15 முதல் 18 வரை, டேராடூனில் நடைபெற உள்ளது.