/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஊரக வேலை திட்டத்தில் தயாராகும் 25,000 செடிகள்
/
ஊரக வேலை திட்டத்தில் தயாராகும் 25,000 செடிகள்
ADDED : ஜூன் 08, 2025 01:27 AM
பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில், 20 ஊராட்சிகளில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், மரம் நடல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். அதில் பள்ளிதெருப்பட்டி ஊராட்சி களரம்பட்டியில், 20 ஊராட்சிகளுக்கு தேவையான 20 வகை செடிகளை உற்பத்தி செய்வதற்கு, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், 13.50 லட்சம் ரூபாய் மதிப்பில் கூடுதல் நாற்றங்கால் பண்ணை, கடந்த மார்ச்சில் அமைக்கப்பட்டது. அங்கு நாவல், நெல்லி, கொய்யா, எலுமிச்சை, புளி, வேம்பு உள்ளிட்ட செடிகள், 25,000 எண்ணிக்கையில் உற்பத்தி செய்யும் பணியில், வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
முதல் கட்டமாக, 10,000 செடிகள் துளிர் விட்டு பசுமையாக வளர்ந்து வருகின்றன. செடிகள் உற்பத்தி செய்யப்படுவதை, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து ஒன்றிய கமிஷனர் கார்த்திகேயன் கூறுகையில், ''6 மாதங்கள் நன்றாக செடிகளை வளர செய்து, ஊராட்சி பகுதிகளில்
நடவு செய்து பராமரிக்கப்படும். ஊராட்சிகளில் உள்ள சிறு விவசாயிகளுக்கும் செடிகள் வழங்கப்படும்,'' என்றார்.