/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விழுப்புரத்துக்கு 2ம் கட்ட நிவாரணப்பொருள் வழங்கல்
/
விழுப்புரத்துக்கு 2ம் கட்ட நிவாரணப்பொருள் வழங்கல்
ADDED : டிச 06, 2024 07:19 AM
சேலம்: 'பெஞ்சல்' புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு உதவிடும்படி, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, 2ம் கட்டமாக நேற்று நிவாரணப்பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டன. கலெக்டர் பிருந்தாதேவி, அதற்கான வாகனத்தை பார்வையிட்டு அனுப்பி வைத்தார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது: கூட்டுறவுத்துறை சார்பில், 2 கிலோ கோதுமை மாவு, ஒரு கிலோ பாசி பருப்பு, துவரம் பருப்பு, உப்பு, ரவை, சர்க்கரை, ஆயில், சோப்பு, பேஸ்ட், பிரஷ், தீப்பெட்டி, சேமியா என, 23 பொருட்கள் அடங்கிய தொகுப்பு, 1,000 எண்ணிக்கையில் அனுப்பப்பட்டுள்ளன. ஏற்கனவே, 6 வாகனங்களில், பிஸ்கட், குடிநீர் பாட்டில்கள், பிரெட், பாய், போர்வை, பால் பவுடர், ஆயில், துவரம் பருப்பு, ஜூஸ் பாக்கெட், பேரீட்சை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும் தேவைக்கு ஏற்ப நிவாரணப்பொருட்கள் அனுப்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.