/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஒரே நாளில் 3 காதல் ஜோடி ஓமலுார் போலீசில் தஞ்சம்
/
ஒரே நாளில் 3 காதல் ஜோடி ஓமலுார் போலீசில் தஞ்சம்
ADDED : மே 06, 2025 01:40 AM
ஓமலுார்:ஒரே நாளில் மூன்று காதல் ஜோடி, போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லுாரை சேர்ந்தவர் விக்னேஷ், 27. இவர், வேலுாரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், திருநெல்வேலி அம்பாசமுத்திரம் இடைக்கால் பகுதியை சேர்ந்த ஸ்வேதா, 24, கோவையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டு, நேற்று முன்தினம் சென்னை அறிஞர் அண்ணா சுயமரியாதை திருமண மையத்தில் திருமணம் செய்து கொண்டனர். பின், பாதுகாப்பு கேட்டு சேலம் எஸ்.பி.,
அலுவகத்தில் தஞ்சமடைந்து, பின்னர் ஓமலுார் மகளிர் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
* மேட்டூர் தாலுகா, ஊஞ்சம்பட்டியை சேர்ந்தவர் விக்னேஷ், 23. இவரும், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகாவை சேர்ந்த கீதா, 21, இருவரும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்தனர். இருவரும், நேற்று முன்தினம் மாதநாயக்கன்பட்டியில் உள்ள பெருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டு, பாதுகாப்பு கேட்டு, ஓமலுார் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்தனர்.
* மேட்டூர், நேரு நகரை சேர்ந்தவர் கலைவாணி, 19. இவரும், பெரும்பாலை போஸ்ட் இந்திரா நகரை சேர்ந்த சஞ்சய்குமார், 22, என்பவரும் நேற்று முன்தினம் காதல் திருமணம் செய்து கொண்டு, தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அனைத்து மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தனர். கலைவாணியின் தாயார் இந்துமதி, 38, ஓமலுார் போலீசில் தனது மகள் கலைவாணியை காணவில்லை என புகார் அளித்திருந்ததால், காதல் ஜோடி ஓமலுார் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.