ADDED : மார் 10, 2024 02:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், ஆத்துார், முல்லைவாடியை சேர்ந்தவர் பிச்சன், 53. இவரது தம்பிகள் செல்வம், 50, தர்மன், 45. இவர்கள் வசிஷ்ட நதி பகுதியொட்டி, இரு குடிசை, கூரை வீடு கட்டியிருந்தனர். நேற்று மதியம், 3:00 மணிக்கு குடிசையில் தீப்பற்றி, மற்றொரு குடிசை, கூரை வீடு என அடுத்தடுத்து பற்றியது.
இதுகுறித்து ஆத்துார் தீயணைப்பு நிலையத்துக்கு, 3:10க்கு தகவல் அளித்தனர். 3:30 மணிக்கு வந்து, தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர்.
இருப்பினும், 3 குடிசைகளும் எரிந்து நாசமானது. மேலும் சமையல் பொருட்கள், பாத்திரங்கள் கருகின. ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

