/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
300 கிலோ புகையிலை சிக்கியது 3 பேர் கைது; 2 கார் பறிமுதல்
/
300 கிலோ புகையிலை சிக்கியது 3 பேர் கைது; 2 கார் பறிமுதல்
300 கிலோ புகையிலை சிக்கியது 3 பேர் கைது; 2 கார் பறிமுதல்
300 கிலோ புகையிலை சிக்கியது 3 பேர் கைது; 2 கார் பறிமுதல்
ADDED : ஜன 04, 2025 02:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்:சேலம் மாவட்டம் காமலாபுரத்தில், தர்மபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கார்களை போலீசார் சோதனைக்கு நிறுத்தியபோது நிற்காமல் செல்ல முயன்றன.
போலீசார் நிறுத்தி சோதனை செய்தபோது, 300 கிலோ புகையிலை பொருட்கள், மூடைகளில் இருந்தன. கார்களுடன் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மூவரை கைது செய்தனர்.
போலீசார் கூறுகையில், 'ஓசூரில் இருந்து தென்காசிக்கு புகையிலை கடத்த முயன்ற, தென்காசி, ஆலங்குளத்தை சேர்ந்த வேலுசாமி, 47, முத்துக்குமார், 37, முத்துராஜா, 30, ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட கார்கள், திருட்டு வாகனங்களா என விசாரணை நடக்கிறது' என்றனர்.