ADDED : ஏப் 24, 2025 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி:தலைவாசல், சாத்தப்பாடியை சேர்ந்த, ஊராட்சி முன்னாள் தலைவர் ஜெயவேல். இவரது மனைவி சந்திரா, 67. ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர். இவர்களது வீட்டில், கடந்த, 21ல் மேற்கூரை ஓட்டை பிரித்துச்சென்று உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவை உடைத்து, 6 பவுன் நகையை திருடிச்சென்றனர்.
கெங்கவல்லி போலீசார் விசாரணையில், சந்திராவின் தங்கையின் பேரன், தயாநிதி, 22, அவரது நண்பர் மணிகண்டன், 27, தாண்டவராயபுரம் சதீஷ், 25, ஆகியோர் திருடியதும், அந்த நகையை அடகு வைத்ததும் தெரிந்தது.
நேற்று, மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

