sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சிறுத்தையை சுட்டும், அடித்தும் கொன்ற முன்னாள் தலைவர் உள்பட 3 பேர் கைது

/

சிறுத்தையை சுட்டும், அடித்தும் கொன்ற முன்னாள் தலைவர் உள்பட 3 பேர் கைது

சிறுத்தையை சுட்டும், அடித்தும் கொன்ற முன்னாள் தலைவர் உள்பட 3 பேர் கைது

சிறுத்தையை சுட்டும், அடித்தும் கொன்ற முன்னாள் தலைவர் உள்பட 3 பேர் கைது


ADDED : அக் 02, 2024 07:25 AM

Google News

ADDED : அக் 02, 2024 07:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: ஆடு, கோழிகளை கடித்துக்கொன்ற சிறுத்தையை சுட்டும், அடித்தும் கொன்ற, ஊராட்சி முன்னாள் தலைவர் உள்பட, 3 பேரை, வனத்துறையினர் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் கொளத்துார், தின்னப்பட்டி ஊராட்சி வெள்-ளக்கரட்டூர் முனியப்பன் கோவில் அருகே, கடந்த, 27ல் ஆண் சிறுத்தை அழுகிய நிலையில் இறந்து கிடந்தது. வனத்துறையினர், பரிசோதனைக்கு பின் அருகே மரத்துண்டுகளை அடுக்கி எரித்-தனர்.

ஆனால் சிறுத்தை தலையில் நாட்டு துப்பாக்கி குண்டு, தாக்கப்-பட்ட காயம் இருந்ததால், துப்பாக்கியால் சுட்டும், அடித்தும் கொன்ற மர்ம நபர்களை வனத்துறையினர் தேடினர்.

நேற்று முன்தினம் தின்னப்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் முனுசாமி, 49 பெரியகொட்டாய் மீனவர் ராஜா, 54, குப்பண்ணக-வுண்டர் தெரு வாழைக்காய் வியாபாரி சசிகுமார், 45, ஆகியோரை மேட்டூர் வனத்துறையினர் கைது செய்தனர்.அவர்களை, சேலம் அலுவலகத்தில் வைத்து விசாரித்தனர். பின் சிறுத்தையை சுட்ட நாட்டு துப்பாகியை பறிமுதல் செய்தனர்.மேலும், 3 பேரையும் நேற்று, மேட்டூர் குற்றவியல் நடுவர் நீதி-மன்றம் - 1ல் ஆஜர்படுத்த முடிவு செய்தனர். இதை அறிந்த தின்-னப்பட்டி மக்கள், 200க்கும் மேற்பட்டோர், மேட்டூர் நீதிமன்ற வளாகத்தில் குவிந்தனர். இரவு, 7:00 மணிக்கு, 3 பேரையும் வனத்-துறையினர், நீதிமன்றத்துக்கு அழைத்துச்சென்றனர். இதனால் மக்கள், 3 பேரையும் பார்க்க முண்டியடித்து சென்றதால் பதற்றம் உருவானது.

ஆனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட மேட்டூர் டி.எஸ்.பி., ஆரோக்யராஜ் தலைமையில் போலீசார், மக்களை வெளியேற்-றினர். மாஜிஸ்திரேட் பத்மப்ரியா, 3 பேரையும், 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். தொடர்ந்து வனத்துறையினர் அவர்களை சிறை காவலுக்கு அழைத்துச்சென்றனர்.






      Dinamalar
      Follow us