/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மண் எடுத்து சென்ற 3 டிப்பர் லாரிகள், பொக்லைன் போலீசாரிடம் ஒப்படைப்பு
/
மண் எடுத்து சென்ற 3 டிப்பர் லாரிகள், பொக்லைன் போலீசாரிடம் ஒப்படைப்பு
மண் எடுத்து சென்ற 3 டிப்பர் லாரிகள், பொக்லைன் போலீசாரிடம் ஒப்படைப்பு
மண் எடுத்து சென்ற 3 டிப்பர் லாரிகள், பொக்லைன் போலீசாரிடம் ஒப்படைப்பு
ADDED : ஜூலை 29, 2025 01:09 AM
சங்ககிரி, உரிய ஆவணங்கள் இல்லாமல், மண் எடுத்து சென்ற மூன்று டிப்பர் லாரி, ஒரு பொக்லைன் வாகனத்தை விவசாயிகள் பிடித்து போலீசாரிம் ஒப்படைத்தனர்.
தேவூர் அருகே அரசிராமணி பேரூராட்சிக்குட்பட்ட குறுக்குப்பாறையூரில், குப்பை கழிவுகளை கொட்டுவதற்கு, ரூ.1 கோடியே 5 லட்சம் மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை மாற்று இடத்தில் அமைத்திட வலியுறுத்தி, விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், இரண்டு மாதங்களாக பணிகள் நடைபெறாமல் இருந்து வந்த நிலையில், கடந்த 24ல், மீண்டும் பணிகளை பேரூராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 5வது நாளாக நேற்று, திடக்கழிவு திட்ட பணிகள் நடைபெறும் பகுதியில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, எல்லப்பாளையத்தில் இருந்து தேவூர் நோக்கி உரிய ஆவணங்கள் இல்லாமல் மண் கொண்டு சென்றதாக, மூன்று டிப்பர் லாரி, ஒரு பொக்லைன் வாகனத்தை விவசாயிகள் சிறை பிடித்தனர்.
தேவூர் போலீசார், டிப்பர் லாரியை சிறை பிடித்த விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சங்ககிரி ஆர்.டி.ஓ., - தாசில்தார் வந்தால்தான் அனைவரும் கலைந்து செல்வோம் என கூறி, 4 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தனர். அதிகாரிகள் வராததால் டிப்பர் லாரிகளையும், பொக்லைனையும் விவசாயிகள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.