/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வரும் 4 வரை 300 சிறப்பு பஸ்கள் இயக்கம்
/
வரும் 4 வரை 300 சிறப்பு பஸ்கள் இயக்கம்
ADDED : ஆக 02, 2025 01:09 AM
சேலம் வார கடைசி நாள், நாளை ஆடிப்பெருக்கையொட்டி, சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், வரும், 4 வரை, 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சேலம் புறநகர், பெங்களூரு, சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை, சிதம்பரம் பகுதிகளில் இருந்து கூடுதல் நடைகளுடன் பஸ்கள் இயங்குகின்றன.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் நாளை நடக்கும் வல்வில் ஓரி விழாவையொட்டி, இன்றும், நாளையும், நாமக்கல், ராசிபுரத்தில் இருந்து, 25 சிறப்பு பஸ்கள் இயக்கப் படுகின்றன.
நாளை ஆடிப்பெருக்கையொட்டி, சேலம், தர்மபுரியில் இருந்து மேட்டூர், பவானி, கூடுதுறை, கொடுமுடி, மோகனுார், மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில், பூலாம்பட்டி, கல்வடங்கம், ஒகேனக்கல், டி.அம்மாபேட்டை, நீர்ப்பத்துறை, கே.ஆர்.பி., அணைக்கட்டு ஆகிய ஊர்களுக்கு பயணியர் தேவைக்கேற்ப கூடுதல் பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தவிர, அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பில் முன்பதிவு மையம், www.tnstc.in என்ற இணையம் வழியே முன்பதிவு நடக்கிறது.