/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'லோக்சபா தேர்தலை முன்னிட்டு 33 பறக்கும் படை அமைக்கப்படும்'
/
'லோக்சபா தேர்தலை முன்னிட்டு 33 பறக்கும் படை அமைக்கப்படும்'
'லோக்சபா தேர்தலை முன்னிட்டு 33 பறக்கும் படை அமைக்கப்படும்'
'லோக்சபா தேர்தலை முன்னிட்டு 33 பறக்கும் படை அமைக்கப்படும்'
ADDED : மார் 14, 2024 01:15 AM
சேலம், லோக்சபா தேர்தலை முன்னிட்டு, அப்பணியில் ஈடுபட உள்ள பல்வேறு குழுக்களுடனான ஆலோசனை கூட்டம், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அதற்கு தலைமை வகித்து கலெக்டர் பிருந்தாதேவி பேசியதாவது:
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததும், கமிஷன் வழிகாட்டு நெறிமுறைப்படி அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படைகள், நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்படும். புகார் தெரிவிக்க, 24 மணி நேரமும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட உள்ளது.
சேலம் மாவட்டத்தின், 11 சட்டசபை தொகுதிகளுக்குட்பட்ட தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிப்பதற்கும், வாகன சோதனைகளில் ஈடுபடவும், முதல்கட்டமாக, 33 பறக்கும் படைகள், 33 நிலை கண்காணிப்பு குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு வகை குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும், வீடியோ கண்காணிப்பு குழுக்கள், வீடியோ பார்வையிடும் குழுக்கள், உதவி கணக்கு குழுக்கள், ஊடக மையத்துக்கு ஊடக சான்றிதழ், கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, தேர்தல் தொடர்பாக கண்காணிப்பு, ஆய்வு பணி தீவிரப்படுத்தப்பட உள்ளது. தேர்தலில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, 'தேர்தல் பருவம் தேசத்தின் பெருமிதம்' எனும் கருப்பொருளை மையமாக வைத்து விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் ஜெகநாதன், சிவசுப்பிரமணிய பிள்ளை, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் லட்சுமி, மயில், மாறன், வேடியப்பன், முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

