/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
354 கிலோ புகையிலை காருடன் பறிமுதல்
/
354 கிலோ புகையிலை காருடன் பறிமுதல்
ADDED : செப் 20, 2024 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
354 கிலோ புகையிலை
காருடன் பறிமுதல்
பனமரத்துப்பட்டி, செப். 20-
கர்நாடகா பதிவெண் கொண்ட ஹூண்டாய் கார், சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி நேற்று முன்தினம் இரவு, 9:30 மணிக்கு அதிவேகமாக சென்றது. 'ரோந்து' போலீசாரை பார்த்ததும் மல்லுார் அருகே அம்மாபாளையத்தில் காரை நிறுத்திவிட்டு டிரைவர் இறங்கி ஓடிவிட்டார். போலீசார் சோதனை செய்தபோது, காரில், 2.50 லட்சம் ரூபாய் மதிப்பில், 354 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. அப்பொருட்களுடன் காரை, போலீசார் பறிமுதல் செய்து கடத்தல் கும்பலை தேடுகின்றனர்.