/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'4 ஆண்டுகளில் 3,845 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன'
/
'4 ஆண்டுகளில் 3,845 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன'
ADDED : மார் 19, 2025 01:24 AM
'4 ஆண்டுகளில் 3,845 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன'
ஆத்துா:ஆத்துார் அருகே ராமநாயக்கன்பாளையம், அப்பமசமுத்திரம், துலுக்கனுார் ஊராட்சிகளில் பல்வேறு திட்டப்பணிகள், குடிநீர் வினியோகம் குறித்து, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, நேற்று ஆய்வு செய்தார்.
இதுகுறித்து கலெக்டர் பிருந்தாதேவி கூறியதாவது: ஆத்துார் ஒன்றிய பகுதிகளில் சீரான குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இந்த ஒன்றியத்தில், 4 ஆண்டுகளில், 153.22 கோடி ரூபாய் மதிப்பில், 4,814 திட்டப்பணிகளில், 3,845 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதி பணிகள் நடக்கின்றன. தவிர, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, 15வது நிதிக்குழு மானிய திட்டத்தில் குடிநீர் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.