/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலத்தை சேர்ந்த 4 பேர் கேரளாவில் பலி சொந்த ஊருக்கு இன்று உடல்கள் வருகை

ADDED : நவ 04, 2024 05:53 AM
கேரளாவில் துாய்மை பணியில் ஈடுபட்டபோது ரயிலில் அடிபட்டு உயிரிழந்த, சேலத்தை சேர்ந்த, 4 பேரின் உடல்கள், சொந்த ஊருக்கு இன்று கொண்டு வரப்படுகிறது.
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம், ஆச்சாங்குட்டப்பட்டி ஊராட்சி அடிமலை புதுாரை சேர்ந்தவர் லட்சுமணன், 60. இவரது மனைவி வள்ளி, 51. இவரது தம்பி லட்சுமணன், 47. இவரது மனைவி ராணி, 45. கேரளாவில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர். பாலக்காடு, சொரனுாரில் துாய்மை பணியில் நேற்று முன்தினம் ஈடுபட்டபோது, ரயிலில் அடிபட்டு நான்கு பேரும் பலியாகினர்.
உடல்களை மீட்டு வர உறவினர்கள் உடனடியாக கேரளா விரைந்தனர். அங்கு உடல்களை பெற்றுக்கொண்டு, இன்று சொந்த ஊருக்கு வரவுள்ளனர்.இதுகுறித்து உறவினர் மாதேஸ்வரன் கூறியதாவது: லட்சுமணன், வள்ளி, ராணி உடல்கள் மீட்கப்பட்டு, இன்று (நேற்று) காலை உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டது. ராணியின் கணவரான லட்சுமணன் உடல் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது. பாலக்காடு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் உடலை ஒப்படைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆம்புலன்ஸில் நாளை (இன்று) சொந்த ஊர் கொண்டு வரப்பட்டு, உடல்கள் தகனம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்
-நமது நிருபர் -.