ADDED : அக் 16, 2026 03:01 AM
அ நிறம் | அளவு
சேலம்: சேலம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில், 3 தனிப்படையினர், நேற்று, அயோத்தியாப்பட்டணம், அழகாபுரம்,
பொன்னம்மாபேட்டை, கன்னங்குறிச்சி, ஓமலுார் உள்பட 14 இடங்களில் உள்ள கால்நடை தீவன உற்பத்தி மில்களில் சோதனை நடத்தினர். அதில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த, கன்னங்குறிச்சியை சேர்ந்த மணிவண்ணன், பாலாஜி, கொண்டலாம்பட்டி மணி, கிருபாகரன் ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடம், 1.5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
