/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பெண் குழந்தை விற்பனை தம்பதி உட்பட 4 பேர் கைது
/
பெண் குழந்தை விற்பனை தம்பதி உட்பட 4 பேர் கைது
ADDED : ஆக 25, 2025 01:50 AM
மகுடஞ்சாவடி:பெண் குழந்தையை, 1.20 லட்சம் ரூபாய்க்கு விற்ற, சேலம் தம்பதி உட்பட, நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே ராமாபுரத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ், 25. இவரது மனைவி சிவகாமி, 21. தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில், கர்ப்பமடைந்த சிவகாமிக்கு, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில், ஆக., 9ல் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை பெற்றோர், 1.20 லட்சம் ரூபாய்க்கு விற்றதாக, சேலம், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சந்தியாவுக்கு தகவல் கிடைத்தது.
அவர் புகாரின்படி, மகுடஞ்சாவடி போலீசார், தம்பதி வீட்டுக்கு சென்றபோது, வீடு பூட்டப்பட்டிருந்தது. விசாரணையில், தம்பதி பெங்களூருவில் இருப்பதாகவும், சேலம் மாவட்டம், அரியானுாரை சேர்ந்த புரோக்கர் தேவராஜ் மூலம், பெங்களூருவை சேர்ந்த பெயின்டர் ரஞ்சித்துக்கு, ஆக., 14ல் குழந்தையை விற்றதும் தெரிந்தது.
இதையடுத்து, குழந்தையை மீட்ட போலீசார், சந்தோஷ், சிவகாமி, தேவராஜ், ரஞ்சித் ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்.

