/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
4.5 யுனிட் மண் பறிமுதல்: 2 டிரைவர் கைது
/
4.5 யுனிட் மண் பறிமுதல்: 2 டிரைவர் கைது
ADDED : மே 06, 2024 02:01 AM
சேலம்: சேலம் புவியியல், சுரங்கத்துறை துணை இயக்குனர் பன்னீர்செல்வம் தலைமையில் அலுவலர்கள் நேற்று முன்தினம் மதியம், மாசிநாயக்கன்பட்டி - வரகம்பாடி சாலை, அரசமர பிள்ளையார் கோவில் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அடுத்தடுத்து வந்த டிப்பர் லாரி, மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டதில், 4.5 யுனிட் மொரம்பு மண் இருப்பது தெரிந்தது.
விசாரணையில் கன்னங்குறிச்சி, செட்டிச்சாவடியை சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர் ராஜா, 42, மாசிநாயக்கன்பட்டி, காசி நகரை சேர்ந்த மினி லாரி டிரைவர் பிரகாஷ், 26, என்பதும், மொரம்பு மண்ணை கடத்தி வந்ததும் தெரிந்தது. மண்ணுடன் இரு லாரிகளை பறிமுதல் செய்த அலுவலர்கள், டிரைவர்களுடன், அம்மாபேட்டை போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.
போலீசார் வழக்குப்பதிந்து இரு டிரைவர்களையும் கைது செய்தனர். எங்கிருந்து, யாருக்கு கடத்தப்பட்டு வந்தது என, தொடர்ந்து விசாரணை நடக்கிறது.