/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'ஐஸ்' சாப்பிட்ட5 சிறுவர்கள் பாதிப்பு
/
'ஐஸ்' சாப்பிட்ட5 சிறுவர்கள் பாதிப்பு
ADDED : ஏப் 26, 2025 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்ககிரி:சங்ககிரி அருகே புள்ளிப்பாளையம், ஏணிப்பாலி பச்சையம்மன் கோவிலில் சுவாமி கும்பிட, நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்தனர்.
அங்கு மொபட்டில் ஐஸ் விற்றவரிடம் வாங்கி சாப்பிட்ட, அழகப்பம்பாளையம்புதுாரை சேர்ந்த, 18 வயது சிறுவன், சங்ககிரி, பறையன்காட்டானுார், 15 வயது சிறுவன், நங்கவள்ளி, 7 வயது சிறுமி, 5 வயது சிறுவன், தர்மபுரி, கம்பைநல்லுார், 10 வயது சிறுமி ஆகியோருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டனர். 5 பேரும் சங்ககிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர். சங்ககிரி போலீசார் விசாரிக்கின்றனர்.