/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம், கிருஷ்ணகிரி 4 விபத்துகளில் 5 பேர் பலி
/
சேலம், கிருஷ்ணகிரி 4 விபத்துகளில் 5 பேர் பலி
ADDED : டிச 12, 2025 08:31 AM
நமது நிருபர் குழு
சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில், 4 இடங்களில் நடந்த விபத்துகளில், சகோதரர்கள் உள்பட, 5 பேர் உயிரிழந்தனர். 35 பேர் காயம் அடைந்தனர்.
திருச்சி மாவட்டம் துறையூர், மங்கப்பட்டிபுதுாரை சேர்ந்த, செல்வராசு மகன் தாமோதரன், 23. அதே பகுதியில் வாகன பேட்-டரி கடை நடத்தி வந்தார். அதற்கு தேவையான உதிரி பாகங்-களை, சேலத்தில் வாங்க, அவரது தம்பி மோகன், 17, என்பவ-ருடன், ஒரு வாரத்துக்கு முன் புதிதாக வாங்கிய, 'பல்சர் ஆர்.எஸ்., 200' பைக்கில் வந்து கொண்டிருந்தார்.
நேற்று காலை, 9:30 மணிக்கு, சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே கீரிப்பட்டி, மேல்கணவாய் - மேல்தொம்பை பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தம்மம்பட்டி நோக்கி எதிரே வந்த, ஈச்சர் மினி லாரி, சாலை வளைவில் அதி-வேகமாக வந்து, சகோதரர்கள் மீது மோதியது.
இதில் துாக்கி வீசப்பட்ட சகோதரர்களை, மக்கள் மீட்டு ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வழியில் இரு-வரும் உயிரிழந்தனர். மல்லியக்கரை போலீசார் விசாரிக்கின்றனர். ஹெல்மெட் இருந்த நிலையில், அணிந்து சென்றனரா என தெரிய-வில்லை என, போலீசார் தெரிவித்தனர். மேலும் லாரியை விட்டு தப்பி ஓடிய டிரைவர் குறித்து விசாரிக்கின்றனர்.
ஒப்பந்த ஊழியர்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் சரண், 24. இவரது நண்பர், சென்னையை சேர்ந்த தினேஷ், 27. இருவரும் ஓசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரிந்தனர். இவர்கள் நேற்று, ஓசூரில் இருந்து, 'டிரம்ப்' பைக்கில் பணிக்கு புறப்பட்டனர். சரண் ஓட்டினார்.
நேற்று காலை, 7:50 மணிக்கு, வரகானப்பள்ளி அருகே ராயக்-கோட்டை - கெலமங்கலம் சாலையில் அதிவேகமாக சென்ற-போது, அங்குள்ள வளைவில் சரண் திருப்ப முயன்றார். கட்டுப்-பாட்டை இழந்த பைக், சாலையோரம் இருந்த எச்சரிக்கை பலகை மீது மோதியது. இருவரும் ஹெல்மெட் அணிந்தபோதும், அதிவேகமாக சென்றதால், சரண் சம்பவ இடத்தில் இறந்தார். ஓசூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் தினேஷூம் இறந்தார். உத்தனப்பள்ளி போலீசார் விசாரிக்கின்-றனர்.
பஸ் பயணி
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை, வன்னியபுரம் அருகே, டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் உள்ளது. அங்கு பணி-புரியும் ஊழியர்கள், 40 பேர், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து, அந்நிறுவன பஸ்சில், பாலக்கோடு நோக்கி சென்று கொண்டிருந்தனர். டிரைவர் சரத்குமார், 30, ஓட்டினார். நள்ளிரவு, 12:30 மணிக்கு, பாலக்கோடு, கர்த்தாரப்பட்டி சுங்கச்சாவடி சர்வீஸ் சாலையில் சென்றுகொண்டிருந்த போது, காஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி, பஸ்சின் பின்புறம் மோதியது. இதில் பஸ்சில் பயணித்த, குட்டம்பட்டியை சேர்ந்த முத்துசாமி, 32, சோமன-அள்ளி அஸ்வினி, 19, பிரியா, 24, நிர்மலா, 22, ஆத்துாரை சேர்ந்த லாரி டிரைவர் மாரிமுத்து, 55, உள்பட, 15 பேர் படுகாய-மடைந்தனர். பாலக்கோடு போலீசார், காயம் அடைந்தவர்களை மீட்டு, பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வழியில் முத்துசாமி உயிரிழந்தார். பாலக்கோடு போலீசார் விசா-ரிக்கின்றனர்.
டிரைவர் துாக்கம்
சென்னையில் இருந்து, 'ஏர் இந்தியா டிராவல்ஸ்' ஆம்னி பஸ், 20 பயணியருடன், கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது. கோவையை சேர்ந்த சேகர், 35, ஓட்டினார். நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு, சேலம் மாவட்டம் வாழப்பாடி, பெரியகிருஷ்ணா-புரம் அருகே, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்த-போது, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சென்டர் மீடியன் பகுதியில் ஏறி கவிழ்ந்தது. சேகர், 20 பயணியர் காயமடைந்தனர். மக்கள், அவர்களை மீட்டு, வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வாழப்பாடி ரோந்து போலீசார், ஏத்தாப்பூர் போலீசார், பஸ்சை நெடுஞ்சாலையில் இருந்து அப்புறப்படுத்-தினர். இச்சம்பவத்தால், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்-பட்டது. சேகர் துாங்கியதால் விபத்து ஏற்பட்டதாக, போலீசார் தெரிவித்தனர்.

