sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நாட்டில் முதல் ஓட்டு திருட்டில் ஈடுபட்டது நேரு லோக்சபாவில் அமித் ஷா 'பகீர்' புகார்

/

நாட்டில் முதல் ஓட்டு திருட்டில் ஈடுபட்டது நேரு லோக்சபாவில் அமித் ஷா 'பகீர்' புகார்

நாட்டில் முதல் ஓட்டு திருட்டில் ஈடுபட்டது நேரு லோக்சபாவில் அமித் ஷா 'பகீர்' புகார்

நாட்டில் முதல் ஓட்டு திருட்டில் ஈடுபட்டது நேரு லோக்சபாவில் அமித் ஷா 'பகீர்' புகார்


ADDED : டிச 11, 2025 06:13 AM

Google News

ADDED : டிச 11, 2025 06:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: பார்லிமென்டில், தேர்தல் சீர்திருத்தம் குறித்த விவாதத்தின் போது, 'சுதந்திர இந்தியாவில் முதல் ஓட்டு திருட்டில் ஈடுபட்டது முன்னாள் பிரதமர் நேரு' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றஞ்சாட்டினார். இதற்கு லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பதிலளித்த நிலையில், இருவருக்கும் மோதல் ஏற்பட்டது.

எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்து வரும் நிலையில், அது தொடர்பான விவாதம் லோக்சபாவில் நடந்து வருகிறது.லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி-.,யுமான ராகுல் பேசுகையில், “பீஹாரில் எஸ்.ஐ.ஆர்., பணி மேற்கொள்ளப்பட்டு, போலி வாக்காளர்கள் களையப்பட்டதாக அரசு கூறுகிறது. ஆனால், பீஹார், ஹரியானாவில் இன்றும் போலி வாக்காளர்கள் உள்ளனர். ஹரியானாவில் மட்டும் 19 லட்சம் போலி வாக்காளர்கள் உள்ளனர். இது குறித்து பார்லி.,யில் விவாதிக்க தயாரா?,” என, கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது: எஸ்.ஐ.ஆர்., குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அது குறித்து இங்கு விவாதிக்க முடியாது என்பது எனக்கு தெளிவாக தெரியும். எஸ்.ஐ.ஆர்., என்பது தேர்தல் கமிஷனின் பொறுப்பில் உள்ளது. தலைமை தேர்தல் கமிஷனர், தேர்தல் கமிஷனர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் மத்திய அரசின் கீழ் பணிபுரியவில்லை. எனவே, இங்கே எஸ்.ஐ.ஆர்., பற்றி கேள்வி எழுப்பினால் யார் பதிலளிப்பர்?

இதற்கு பதிலளித்த ராகுல், “ஓட்டு திருட்டு என்னும் தேச விரோத செயலில் அரசு ஈடுபடுகிறது. இதனால், விவாதிக்க முடியாமல் தப்பி ஓடுகிறது,” என்றார்.

இதையடுத்து பேசிய அமித் ஷா பேசியதாவது:

பா.ஜ., மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி ஒருபோதும் விவாதங்களில் இருந்து தப்பி ஓடாது. எந்த விஷயமானாலும், பார்லி விதிகளின்படி விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

சுதந்திர இந்தியா பிறந்ததை அடுத்து, முதன்முதலாக ஓட்டுத் திருட்டில் ஈடுபட்டது முன்னாள் பிரதமர் நேரு. சுதந்திரத்திற்குப் பிறகு, நாட்டின் முதல் பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டும். சர்தார் வல்லபாய் படேல் 28 ஓட்டுகளைப் பெற்றார். நேரு இரண்டு ஓட்டுகளை மட்டுமே பெற்று பிரதமரானார்.

ரேபரேலியில் முன்னாள் பிரதமர் இந்திரா போட்டியிட்ட போதும் ஓட்டு திருட்டு நடந்தது. இதனால், தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டும் எதிர்க்கட்சிகள் தேர்தல் முறையை ஏற்றுக்கொள்கின்றனர். தோல்வி அடைந்தால் தேர்தல் கமிஷனை குறைகூறுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

நேரு, இந்திராவின் பெயரை ஓட்டுத் திருட்டில் சம்பந்தப்படுத்தி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கும், தேர்தல் கமிஷனுக்கும் எதிராக முழக்கங்கள் எழுப்பினர்; வெளிநடப்பு செய்தனர்.






      Dinamalar
      Follow us