/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
எக்கட்டாம்பாளையத்தில் பொங்கல் விழா ஜோர்
/
எக்கட்டாம்பாளையத்தில் பொங்கல் விழா ஜோர்
ADDED : டிச 12, 2025 08:33 AM
சென்னிமலை: சென்னிமலை அருகே எக்கட்டாம்பாளையம் மாரியம்மன் கோவிலில் நடப்பாண்டு பொங்கல் விழா பூச்சாட்டு கடந்த மாதம், 25ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. கடந்த, 3ம் தேதி இரவு கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்வான பொங்கல் விழா நேற்று நடந்தது.
நொய்யல், அண்ணாமலை பாளையம், புதுவலசு, சானார ்பாளையம், தாமரைக்காட்டுவலசு மற்றும் கோவிலை சேர்ந்த ஏழு கிராமத்து மக்கள், பொங்கல் வைத்து வழிபட்டனர். திரளான பக்தர்கள் ஆடு, கோழிகள் பலியிட்டனர். இரவில் கம்பம் பிடுங்கப்பட்டு நொய்யல் ஆற்றில் விடப்பட்டது. இதேபோல் சென்னிமலை அருகே பசுவபட்டி மாரியம்மன் கோவிலில் நேற்று நடந்த பொங்கல் விழாவில் திரளான பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.

