/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கலெக்டர் ஆபீசுக்கு குண்டு மிரட்டல்; வழக்கம்போல் சோதனையில் 'புஸ்'
/
கலெக்டர் ஆபீசுக்கு குண்டு மிரட்டல்; வழக்கம்போல் சோதனையில் 'புஸ்'
கலெக்டர் ஆபீசுக்கு குண்டு மிரட்டல்; வழக்கம்போல் சோதனையில் 'புஸ்'
கலெக்டர் ஆபீசுக்கு குண்டு மிரட்டல்; வழக்கம்போல் சோதனையில் 'புஸ்'
ADDED : டிச 12, 2025 08:33 AM
சேலம்: சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு, மின்னஞ்சலில் குறுந்த-கவல் வந்தது. அதில், 'மதியம், 2:00 மணிக்குள் கலெக்டர் அலுவ-லகத்தில் குண்டு வெடிக்கும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதிகாரிகள் அதிர்ச்சியடைந்து, சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுலகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
தொடர்ந்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் போலீசார், அனைத்து துறை அலுவ-லகங்களில், அதிநவீன கருவிகள் மூலம் சோதனை மேற்கொண்-டனர். மோப்ப நாய் ரூபியுடனும், பல்வேறு இடங்களில் சோதனை நடந்தது. மாநகர போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முடிவில், குண்டு வைத்ததாக வந்த தகவல் புரளி என, போலீசார் தெரிவித்தனர்.
கடந்த, 5 மாதங்களில் இதுவரை, 6 முறை குண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், மின்னஞ்சல் அனுப்பியவர், போலீசா-ரிடம் சிக்காமல் உள்ளார். தொடர்ந்து சைபர் கிரைம், மாநகர போலீசார் விசாரிக்கின்றனர்.