ADDED : ஏப் 02, 2025 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
5 பவுன் தாலி திருட்டு
ஓமலுார்,:காடையாம்பட்டி, தாத்தியம்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி, 62. தனியார் பள்ளியில் டிரைவராக உள்ளார். இவரது மனைவி வள்ளி, 56, கூலித்தொழிலாளி. இவர்கள், நேற்று முன்தினம் பணிக்கு சென்றனர். மதியம், பழனிசாமி வீட்டுக்கு வந்தபோது கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த, 5 பவுன் தாலிக்கொடி சங்கிலியை காணவில்லை. நேற்று பழனிசாமி அளித்த புகார்படி, ஓமலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

