/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பெண்கள் மீது மிளகாய்பொடி துாவி 5 பவுன் பறிப்பு
/
பெண்கள் மீது மிளகாய்பொடி துாவி 5 பவுன் பறிப்பு
ADDED : அக் 11, 2025 01:01 AM
சேலம், சேலம், கருப்பூர் அருகே தட்டாஞ்சாவடி, அண்ணா நகரை சேர்ந்தவர் ரேணுகா, 32. இவர், தோழி ரம்யாவுடன் சேர்ந்து, தட்டாஞ்சாவடியில் இட்லி கடை நடத்துகிறார். நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, கடையை பூட்டி விட்டு ரம்யாவுடன், மொபட்டில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார்.
மூங்கில்பாடியில் சென்றபோது, சாலையில் பாலிதீன் காகிதம் இருந்ததை பார்த்து, வாகனத்தை நிறுத்தி அதை எடுத்து பார்த்தார். அப்போது அருகே முட்புதரில் இருந்த இரு மர்ம நபர்கள், மிளகாய் பொடி துாவ, இரு பெண்களும் தடுமாறி விழுந்தனர். தொடர்ந்து ரேணுகா அணிந்திருந்த தாலி சங்கிலியை பறிக்க முயன்றபோது, அவர் தடுத்தார்.
அப்போது அந்த நபர்கள், மீண்டும் மிளகாய் பொடியை அதிகளவில் துாவி தாக்கிவிட்டு, 5 பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்து ரேணுகா புகார்படி, கருப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.