/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காட்டுப்பன்றி வேட்டைக்கு முயன்ற 6 பேர் கைது நாட்டு வெடிகுண்டுகள், கார், பைக் பறிமுதல்

ADDED : ஜூலை 19, 2025 01:13 AM
ஆத்துார், காட்டுப்பன்றி வேட்டைக்கு முயன்ற, 6 பேரை கைது செய்த வனத்துறையினர், 21 நாட்டு வெடி குண்டுகள், கார், பைக்கை பறிமுதல் செய்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்துார், கீரிப்பட்டி, கீழ் கணவாய் வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு, தம்மம்பட்டி வனச்சரகர் முருகேசன் தலைமையில் வனத்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது, 'அவுட்டு காய்' எனும் நாட்டு வெடிகுண்டுகள், அரிவாள் உள்ளிட்டவற்றுடன் வலம் வந்த, 6 பேரை பிடித்து விசாரித்ததில், காட்டுப்பன்றி வேட்டைக்கு முயன்றது தெரிந்தது.
அத்துடன், மல்லுாரை சேர்ந்த பிரகாஷ், 52, பாரப்பட்டி குமார், 47, மேச்சேரியம்பாளையம் மணிகண்டன், 46, ஸ்ரீனிவாசன், 34, கீழ்கணவாய் கணபதி, 46, நாட்டு வெடிகுண்டு வழங்கிய, கீரிப்பட்டி கோபிநாத், 32, ஆகியோர் மீது வன உயிரின குற்ற வழக்கு பதிந்து, ஆத்துார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அவர்களிடம் பட்டாசு மருந்துகளை வைத்து தயாரித்த, 21 நாட்டு வெடிகுண்டுகள், அரிவாள், வெடி மூலப்பொருட்கள், 'பொலிரோ - மேக்ஸ்' கார், ஹீரோ - ஸ்பிளண்டர் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.