/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மர்ம விலங்கு கடித்து 6 செம்மறி ஆடு சாவு
/
மர்ம விலங்கு கடித்து 6 செம்மறி ஆடு சாவு
ADDED : மே 29, 2024 07:53 AM
ஓமலுார் : சேலம் மாவட்டம் ஓமலுார் அருகே வெள்ளாளப்பட்டி, வெள்ளை பிள்ளையார் கோவிலை சேர்ந்தவர் ரங்கசாமி, 38. இவரது மனைவி கலைவாணி, 35. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். ஆடு, மாடுகளை வளர்க்கும் ரங்கசாமி, நேற்று முன்தினம் கொட்டகையில் கட்டி வைத்துள்ளார்.
நேற்று காலை பார்த்தபோது கழுத்து, வயிறு, தொடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில், மர்ம விலங்குகள் கடித்து குதறி, 6 செம்மறி ஆடுகள் இறந்து கிடந்தன. ஒரு ஆடு, காயங்களுடன் உயிருக்கு போராடியது. ரங்கசாமி வருவாய்த்துறைக்கும், வெள்ளாளப்பட்டி கால்நடை மருத்துவர் கவிதாவுக்கும் தகவல் கொடுத்தார். உடனே காயம் அடைந்த ஆடுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இறந்த ஆடுகளை பிரேத பரிசோதனை செய்து புதைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிவில் ஆடுகள் எப்படி இறந்தது என தெரியவரும் என, மருத்துவர் தெரிவித்தார். முன்னதாக சேலம் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் பாரதி, ஓமலுார் கால்நடை துறை உதவி இயக்குனர் செல்வகுமார், சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அவர்களிடம் ரங்கசாமி, இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்தார். வருவாய்த்துறையினர் விசாரிக்கின்றனர்.