தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ இன்று முதல் 7 நாள் சொற்பொழிவு

இன்று முதல் 7 நாள் சொற்பொழிவு

இன்று முதல் 7 நாள் சொற்பொழிவு


ADDED : ஜூலை 27, 2026 12:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 27, 2026 12:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம் சனாதன தர்ம வித்யா பீடம் சார்பில் உலக நன்மைக்காக ஒருங்கிணைந்த ஆனந்த மையம் நிறுவப்பட உள்ளது. அதன் ஒரு பகுதியாக காந்தி சாலை, டி.வி.என்., திருமண மண்டபத்தில் டாக்டர் சந்திரசேகர், இன்று முதல் ஆக., 2 வரை, தினமும் மாலை, 6:15 முதல் இரவு, 8:15 மணி வரை, 'ஸ்ரீமத் பாகவத சப்-தாஹ ஞான யக்ஞம்' சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.

அதற்கு முன், விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம், ஸ்ரீபாகவத பகவான் ஆரத்தி நடத்தப்படும். ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரம செயலர் யதாத்மானந்தர் மகராஜ் தலைமை வகிக்கிறார். ஆக., 2 மாலையில், சேலம் சின்மயா மிஷன் பிரம்மச்சாரி ஸ்ரீஹரிகி-ருஷ்ணன் பங்கேற்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us