தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கூடுதல் ஆய்வக நுட்புனர்களை நியமிக்க கோரிக்கை

கூடுதல் ஆய்வக நுட்புனர்களை நியமிக்க கோரிக்கை

கூடுதல் ஆய்வக நுட்புனர்களை நியமிக்க கோரிக்கை


ADDED : ஜூலை 27, 2026 12:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 27, 2026 12:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலத்தில், தமிழக ஒருங்கிணைந்த ஆய்வக நுட்புனர் சங்க, மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. மாநில தலைவர் அலெக்சாண்டர் தலைமை வகித்தார்.

அதில் ஊதிய வரம்பை கல்வி தகுதி மற்றும் பணியின் தன்-மைக்கு ஏற்ப, 'சம வேலைக்கு சம ஊதியம்' என மாற்றி அமைத்தல்; 2024ல் பணியில் சேர்ந்த அனைவரையும் நிரந்தரப்ப-டுத்தல்; பணி நேரத்தை, 6 மணி நேரமாக குறைத்தல்; ஆரம்ப சுகாதார நிலையங்களில், சுழற்சி முறையில் பணி வழங்காமல், கூடுதல் ஆய்வக நுட்புனர்களை நியமித்தல்; சுகாதார ஆய்வாளர் நிலை - 1 பதவி உயர்வுக்கு, 10 ஆண்டு என்பதை, 5 ஆண்டாக குறைத்தல்; இளநிலை பூச்சியியல் வல்லுனர், மாவட்ட நுண் கிருமியியல் பணிக்கு ஆய்வக நுட்புனர்களின் தகுதி வாய்ந்தவர்க-ளுக்கு பதவி உயர்வு வழங்குதல் என்பன உள்பட, பல்வேறு தீர்-மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மேலும் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆக., 14ல் சென்னை சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் முன், முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டதாக, மாநில செயலர் தியாகராஜன்

தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us