ADDED : நவ 06, 2025 02:01 AM
கெங்கவல்லி, கெங்கவல்லி அருகே கூடமலை ஊராட்சி, தெற்கு காட்டுக்கொட்டாயை சேர்ந்த விவசாயி ராஜேந்திரன், 50. இவரது தோட்டத்தில் மலைப்பாம்பு உள்ளதாக, நேற்று கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், தோட்டத்தில் இருந்த, 7 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை உயிருடன் பிடித்து, கெங்கவல்லி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின், வனப்பகுதியில் மலைப்பாம்பை விட்டனர்.
ஓணானை விழுங்கிய பாம்பு
ஆத்துார், கொத்தாம்பாடி, பெரியார் நகரை சேர்ந்தவர் சந்திரா, 40. இவரது வீட்டின் பின் பகுதியில் உள்ள மரத்தில், நேற்று மாலை, 4:00 மணிக்கு சத்தம் கேட்டது. அங்கு சென்று சந்திரா பார்த்தபோது, ஓணானை விழுங்கிய நிலையில் பச்சை நிறத்தில் பாம்பு இருந்தது. அவர் தகவல்படி, அங்கு சென்ற ஆத்துார் தீயணைப்பு நிலைய வீரர்கள், 4 அடி நீள பாம்பை உயிருடன் பிடித்தனர். பின் ஆத்துார் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

