/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் யார்ன் கலரிங் பார்க் நிர்வாக கட்டடம் நாளை திறப்பு
/
சேலம் யார்ன் கலரிங் பார்க் நிர்வாக கட்டடம் நாளை திறப்பு
சேலம் யார்ன் கலரிங் பார்க் நிர்வாக கட்டடம் நாளை திறப்பு
சேலம் யார்ன் கலரிங் பார்க் நிர்வாக கட்டடம் நாளை திறப்பு
ADDED : நவ 06, 2025 02:01 AM
சேலம், சேலம், ஜாகீர் அம்மாபாளையம், ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காவில், சேலம் யார்ன் கலரிங் பார்க் நிர்வாக கட்டட திறப்பு விழா, நாளை காலை, 11:00 மணிக்கு நடக்க உள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், நிர்வாக கட்டடத்தை திறந்து வைத்து பேச உள்ளார். சிறப்பு விருந்தினர்களாக கைத்தறி, துணிநுால்துறை அமைச்சர் காந்தி, தொழில்துறை அமைச்சர் ராஜா, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், மேயர், அரசு அலுவலர்கள், பூங்கா இயக்குனர்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
வதந்திகளை நம்பாதீர்
சேலம் யார்ன் கலரிங் பார்க் தலைவர் அழகரசன், நிர்வாக இயக்குனர் தர்மலிங்கம், துணை நிர்வாக இயக்குனர் சசிகுமார் உள்ளிட்டோர் வெளியிட்ட அறிக்கை:
சேலம் யார்ன் கலரிங் பார்க் திட்டம், மாசு உண்டாக்கும் தொழில் அல்ல. பசுமை திட்டமாக நீரையும், விவசாயத்தையும் காப்பதோடு, மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டம். 200 கோடி ரூபாய் முதலீட்டில், 10 எம்.எல்.டி., திறன் கொண்ட பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், நவீன தொழில்நுட்பத்துடன், உலக தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் நிறைவேறாவிட்டால், மாவட்டத்தில் உள்ள சிறு, ஜவுளி தொழில்கள் முடங்கி, 5 லட்சம் பேர் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படும். திட்டம் செயல்பட்ட பின், 15,000 பேர் நேரடியாகவும், 50,000 பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை பெறுவர். தவறான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

