/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நிறுவன காலி பணியிட விபரம் இணையத்தில் பதிய உத்தரவு
/
நிறுவன காலி பணியிட விபரம் இணையத்தில் பதிய உத்தரவு
ADDED : நவ 06, 2025 02:00 AM
சேலம், சேலம் மாவட்டத்தில் உள்ள நிறுவனங்களில் காலி பணியிட விபரங்களை, இணையத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய, துணை இயக்குனர் மணி அறிக்கை:
பணி காலியிட அறிவிப்பு சட்டப்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு, பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களிடம் இருந்து, செப்., 30ல் முடியும் காலாண்டுக்குரிய பணியாளர்கள் விபரம் சேகரிக்கப்பட உள்ளது. நிறுவன வேலைவாய்ப்பு தகவல்களை வேலைவாய்ப்பு இணையத்தில் உள்ளீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். employmentexchange.tn.gov.in/Empower எனும் இணையதளத்தில் சென்று, தற்போது தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஆண்கள், பெண்கள், பற்றாக்குறை, காலி பணியிடம் உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்ய வேண்டும். காலி பணியிடத்துக்கு உரிய கல்வித்தகுதியை குறிப்பிட வேண்டும். பணிபுரியும் மாற்றுத்திறனாளி பணியாளர் விபரங்களையும் பதிவு செய்ய வேண்டும். இவற்றை காலமுறை அறிக்கை பதிவேட்டில் பதிந்து, வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க கேட்டுக்
கொள்ளப்படுகிறது.

