/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
துாத்துக்குடி ரவுடி கொலை மேலும் 7 பேருக்கு 'காப்பு'
/
துாத்துக்குடி ரவுடி கொலை மேலும் 7 பேருக்கு 'காப்பு'
துாத்துக்குடி ரவுடி கொலை மேலும் 7 பேருக்கு 'காப்பு'
துாத்துக்குடி ரவுடி கொலை மேலும் 7 பேருக்கு 'காப்பு'
ADDED : ஜூலை 24, 2025 02:09 AM
சேலம், துாத்துக்குடி மாவட்டம் ஆரோக்கியபுரம், பெரியார் நகரை சேர்ந்த, ரவுடி மதன்குமார், 28. இவர் துாத்துக்குடியில் நடந்த கொலை வழக்கில் ஜாமினில் வந்து, சேலம், அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு வந்தார். கடந்த, 15ல், போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு விட்டு, எதிரே உள்ள ஓட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, 6 பேர் கும்பல், அவரை வெட்டி கொன்றது.
இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து, துாத்துக்குடியை சேர்ந்த ரவுடி ஹரிபிரசாத் உள்பட, 6 பேரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரித்ததில், 13 பேர் அடங்கிய கும்பல், சேலம் வந்து தங்கி, கொலைக்கு திட்டமிட்டிருந்தது தெரிந்தது. இதனால் அவர்களை, இன்ஸ்பெக்டர் காந்திமதி தலைமையில் போலீசார், துாத்துக்குடியில் தங்கி, 2 நாட்களாக தேடினர்.
இந்நிலையில் துாத்துக்குடி, அலங்கார தட்டையை சேர்ந்த கிருஷ்ணகாந்த், 28, செல்வபூபதி, 26, ஆறுமுகநேரி பெருமாள்புரம் ரத்தினவர்ஷா, 22, ஆரோக்கியபுரம் மாதா நகர் பிரவின்ஷா, 22, மேல் அலங்கார தெரு ரிஷிகபூர், 28, மேல் தெரு பொட்டல்காடு சின்னதம்பி, 35, விக்னேஷ்வரன், 20, ஆகியோரை, நேற்று போலீசார் கைது செய்து, அஸ்தம்பட்டி ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர்.