/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புத்தாடை எடுக்க குவியும் கூட்டம் மாநகரில் 700 போலீசார் கண்காணிப்பு
/
புத்தாடை எடுக்க குவியும் கூட்டம் மாநகரில் 700 போலீசார் கண்காணிப்பு
புத்தாடை எடுக்க குவியும் கூட்டம் மாநகரில் 700 போலீசார் கண்காணிப்பு
புத்தாடை எடுக்க குவியும் கூட்டம் மாநகரில் 700 போலீசார் கண்காணிப்பு
ADDED : அக் 19, 2025 02:33 AM
சேலம்: நாளை தீபாவளியை முன்னிட்டு, சேலம் கடை வீதியில் புத்-தாடை எடுக்க நேற்று காலை முதலே, ஏராளமானோர் குவிந்தனர். அதனால் அங்கு அசம்பாவிதம், திருட்டு சம்பவங்களை தடுக்க, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல் மாநகர் முழுதும் உள்ள ஜவுளி கடைகள், இனிப்பு, பட்டாசு கடைகளில் கூட்டம் காணப்படுகிறது. இதனால் கமிஷனர் அனில்குமார் கிரி உத்தரவுப்படி, 4 ரோடு, புது பஸ் ஸ்டாண்ட், ஜங்ஷன், டவுன், கடைவீதி, அக்ரஹாரம், அருணாசல ஆசாரி தெரு, தாதுபாய்குட்டை மற்றும் அஸ்தம்-பட்டி, கொண்டலாம்பட்டி, சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா உள்-ளிட்ட பகுதிகளில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்-பட்டுள்ளனர்.
குறிப்பாக ஆயுதப்படை போலீசார், 120 பேர், ஊர்காவல் படை-யினர், 110 பேர், போச்சம்பள்ளி பட்டாலியனில் இருந்து, 80 பேர் உள்பட, 700 போலீசார், மாநகர் முழுதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சாதாரண உடைகளிலும், 100 போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொள்கின்றனர்.