ADDED : அக் 19, 2025 02:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நேற்று முதலே, மக்கள் பட்டாசு வெடிக்க தொடங்கிவிட்டனர். அதேநேரம் வன விலங்குகளுக்கு தொல்லை கொடுக்கும்படியோ, வனத்தில் தீ பரவும்படியோ, வனத்தை ஒட்டிய இடங்களில் பட்-டாசு வெடிக்கக்கூடாது என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக சேலம் சேர்வராயன் தெற்கு, வடக்கு, ஏற்காடு, டேனிஷ்பேட்டை, வாழப்பாடி, மேட்டூர், ஆத்துார், கருமந்துறை, தம்மம்பட்டி வனச்சரக பகுதிகளில் வனத்தை ஒட்டியுள்ள கிரா-மங்களில் பட்டாசு வெடிக்கக்கூடாது என, வனத்துறை அதிகா-ரிகள், மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.