/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விவசாய தோட்டத்தில் 8 அடி நீள மலைப்பாம்பு மீட்பு
/
விவசாய தோட்டத்தில் 8 அடி நீள மலைப்பாம்பு மீட்பு
ADDED : நவ 21, 2025 03:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், ஆத்துார், துலுக்கனுார் ஊராட்சி வளையமாதேவி பிரிவு சாலையை சேர்ந்தவர் சதீஷ்குமார், 42. இவரது வீடு அருகே உள்ள விவசாய நிலத்தில், நேற்று இரவு, 7:30 மணிக்கு மலைப்பாம்பு இருப்பதை, சதீஷ்குமார் பார்த்துள்ளார்.
அவர் தகவல்படி, ஆத்துார் தீயணைப்பு நிலைய வீரர்கள், அங்கு சென்று, அரை மணி நேரத்துக்கு பின், 8 அடி நீள மலைப்பாம்பை உயிருடன் பிடித்து, ஆத்துார் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.அதேபோல் நரசிங்கபுரம், புது வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், பாலமணிகண்டன், 40, என்பவரது வீட்டில் இருந்த நாக பாம்பை உயிருடன் பிடித்து, ஆத்துார் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

