/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மது அருந்தி ஓட்டிய டிரைவர் வேன் கவிழ்ந்து 8 பேர் காயம்
/
மது அருந்தி ஓட்டிய டிரைவர் வேன் கவிழ்ந்து 8 பேர் காயம்
மது அருந்தி ஓட்டிய டிரைவர் வேன் கவிழ்ந்து 8 பேர் காயம்
மது அருந்தி ஓட்டிய டிரைவர் வேன் கவிழ்ந்து 8 பேர் காயம்
ADDED : நவ 13, 2025 03:33 AM
ஏற்காடு: ராசிபுரத்தை சேர்ந்தவர்கள், நேற்று முன்தினம், சேலம் மாவட்டம் ஏற்காட்டை சுற்றிப்பார்க்க சுற்றுலா வேனில் புறப்பட்-டனர். ராசிபுரத்தை சேர்ந்த ஸ்ரீதரன், 29, ஓட்டினார். தொடர்ந்து ஏற்காடு வந்தவர்கள், பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தனர்.
நேற்று சேர்வராயன் கோவில்
பகுதிக்கு சென்றனர். அங்கு டிரைவர்
உள்பட அனைவரும் மது அருந்தினர். பின் அங்கிருந்து ஏற்காடு நோக்கி புறப்பட்டனர்.
சிறிது துாரத்தில் மிக இறக்கமான சாலையில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்-தது. இதில் வேனில் வந்த, 8 பேர் காயம் அடைந்தனர்.ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டது. அதில், 3 பேர், மேல் சிகிச்-சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். ஏற்-காடு போலீசார் விசாரிக்கின்றனர்.