/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
85 வயது முதியோர் வீட்டில் இருந்து ஓட்டுப்போட விழிப்புணர்வு
/
85 வயது முதியோர் வீட்டில் இருந்து ஓட்டுப்போட விழிப்புணர்வு
85 வயது முதியோர் வீட்டில் இருந்து ஓட்டுப்போட விழிப்புணர்வு
85 வயது முதியோர் வீட்டில் இருந்து ஓட்டுப்போட விழிப்புணர்வு
ADDED : மார் 21, 2024 02:02 AM
ஆத்துார், லோக்சபா தேர்தலில், 85 வயது மற்றும் மாற்றுத்திறனாளிகள், வீட்டில் இருந்தபடியே ஓட்டுகளை போட, தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி கெங்கவல்லி தொகுதியில், முதியோர், மாற்றுத்திறானாளிகளிடம் தபால் ஓட்டு அளிப்பது குறித்து, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கணேஷ், கெங்கவல்லி தாசில்தார் வெங்கடேசன் உள்ளிட்ட அலுவலர்கள் நேற்று, வீடுதோறும் சென்று, '12டி' படிவம் பெற்று ஓட்டு போடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதுகுறித்து தேர்தல் அலுவலர்கள் கூறுகையில், '85 வயது முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு, '12டி' படிவம் பூர்த்தி செய்து வீட்டில் இருந்தபடி ஓட்டு போடலாம். தபால் ஓட்டு, வீட்டில் இருந்து ஓட்டு போடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளோருக்கு தேர்தல் கமிஷன் அறிவுறுத்தல்படி, தபால் ஓட்டு போட ஏற்பாடு செய்யப்படும்' என்றனர்.