/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
93 எல்.இ.டி., விளக்கு பொருத்த முடிவு
/
93 எல்.இ.டி., விளக்கு பொருத்த முடிவு
ADDED : நவ 29, 2025 12:58 AM
ஓமலுார், நசேலம் மாவட்டம் ஓமலுார் டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் கவுன்சிலர் கூட்டம் நேற்று நடந்தது.
தி.மு.க.,வை சேர்ந்த, தலைவி செல்வராணி தலைமை வகித்தார். 20 பொருள்கள் விவாதத்தில் கொண்டு வந்தனர்.
அதில் ஓமலுார் நகரில் நடத்தப்பட்ட சிறப்பு பகுதி சபா கூட்டம், 'உங்களுடன் முதல்வர்' திட்ட முகாம், அமைச்சர் ராஜேந்திரன் மக்கள் சந்திப்பு முகாமில் பெறப்பட்ட மனுக்களில், மக்களின் அடிப்படை தேவையான, 93 எல்.இ.டி., தெரு விளக்குகளை பொருத்தல்; ஓமலுார் பஸ் ஸ்டாண்டில் கட்டப்பட்ட தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு குலுக்கல் முறையில் வியாபாரிகளை தேர்வு செய்தல் என்பன உள்பட, 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செயல் அலுவலர் சந்திரக்குமார், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

