/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தம்பியை காப்பாற்ற முயன்ற அண்ணன்; மின்சாரம் பாய்ந்து பரிதாப பலி
/
தம்பியை காப்பாற்ற முயன்ற அண்ணன்; மின்சாரம் பாய்ந்து பரிதாப பலி
தம்பியை காப்பாற்ற முயன்ற அண்ணன்; மின்சாரம் பாய்ந்து பரிதாப பலி
தம்பியை காப்பாற்ற முயன்ற அண்ணன்; மின்சாரம் பாய்ந்து பரிதாப பலி
ADDED : அக் 18, 2024 07:22 AM
சங்ககிரி: சங்ககிரி அருகே, சுவுதயாகாடு பகுதியில் மின்சாரம் பாய்ந்து, கீழே கிடந்த தம்பியை காப்பாற்ற சென்ற அண்ணன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
வைகுந்தம் அருகே சுவதயாகாட்டை சேர்ந்த விவசாயி சேகர், 65. இவரது மனைவி சரஸ்வதி. நேற்று காலை, 10:15 மணிக்கு வீட்டில் உள்ள மின் ஒயரை பிளக்கில் பொருத்தும் போது, மின்சாரம் தாக்கப்பட்டு ஒயரை பிடித்தவாறு சேகர் கீழே விழுந்து கிடந்தார். இதை பார்த்த அவரது மனைவி சரஸ்வதி காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது அவரும் நிலை தடுமாறி கீழே விழந்துள்ளார். சரஸ்வதியின் சத்தத்தை கேட்டு, அருகில் வசித்து வந்த சேகர் அண்ணன் தனபால், 73, ஓடி வந்து சேகரின் கையில் இருந்த மின்சார ஒயரை பிடித்து இழுத்துள்ளார்.
அதில் எதிர்பாராதவிதமாக தனபால் உடல் மீது மின்சாரம் பாய்ந்ததில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். பலத்த காயமடைந்த சேகர், மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிசிக்கை பெற்று வருகிறார். சங்ககிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.தம்பியை காப்பாற்ற முயன்ற அண்ணன், மின்சாரம் தாக்கி உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.