/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பைக்கை முட்டிய காட்டெருமை கூலித்தொழிலாளி படுகாயம்
/
பைக்கை முட்டிய காட்டெருமை கூலித்தொழிலாளி படுகாயம்
ADDED : ஜூலை 11, 2025 01:24 AM
பெத்தநாயக்கன்பாளையம்,  சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர், வடக்கு காட்டை சேர்ந்த, கூலித்தொழிலாளி சுரேஷ்கண்ணன், 31. நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு, ஏத்தாப்பூர் கடைவீதிக்கு சென்று விட்டு, வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
வடக்கு காடு அருகே மூல முடுக்கு பகுதியில் வந்தபோது, பைக்கின் முகப்பு விளக்கு வெளிச்சத்தை பார்த்த, குட்டியுடன் வந்த தாய் காட்டெருமை, பைக்கை முட்டித்தள்ளியது. இதில் சுரேஷ்கண்ணன் தடுமாறி விழுந்தார். உடனே அப்பகுதியினர் ஓடிவர, காட்டெருமைகள், காட்டுக்குள் ஓடிவிட்டன. காயம் அடைந்த சுரேஷ் கண்ணனை, மக்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஏத்தாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

