/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'மத்தியில் ஜனநாயகத்தை மதிக்காத அரசு'
/
'மத்தியில் ஜனநாயகத்தை மதிக்காத அரசு'
ADDED : ஏப் 07, 2025 02:26 AM
சேலம்: இ.கம்யூ., கட்சியின், 26வது மாநில மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம், சேலத்தில் நேற்று, நடந்தது. அதில் அக்-கட்சி மாநில செயலர் முத்தரசன் பேசியதாவது:
கட்சியின், 26வது மாநில மாநாடு, ஆக., 15 முதல், 18 வரை நடக்க உள்ளது. கட்சி பொதுச்செயலர் ராஜா, அகில இந்திய தலைவர்கள், மாநில தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் அர-சியல், பொருளாதார, சமூக நிலைப்பாடு குறித்து ஆய்வு செய்து அரசியல் தீர்மானமாக நிறைவேற்றப்
படும். வக்ப் திருத்த சட்டத்தை கண்டித்து, மத்திய அரசுக்கு எதி-ராக வரும், 9ல், மாவட்ட தலைநகர் பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தை மத்திய அரசு மதிக்கவில்லை. மத்-தியில் ஜனநாயகத்தை மதிக்காத அரசு நடக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

